Mon. Feb 24th, 2020

Raja News

Tamil News Website

மாஸ்டர் படத்தில் விஜய்சேதுபதி வில்லன் இல்லையா?அப்பா யாருதான் வில்லன்

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி. இவருக்கு என்றும் பல்வேறு மாநிலங்களில் பல ரசிகர்கள் உள்ளனர் இவர் நடித்த திரைப்படங்கள் வெளியானால் அது தளபதியின் ரசிகர்களுக்கு திருவிழாவாக தான் இருக்கும். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படம் மீது அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் மிகப் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த திரைப்படத்தில் சேதுபதி அவர்கள் வில்லனாக நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது இந்த படத்தில் சேதுபதி வில்லன் இல்லை என்று சில தகவல்கள் இணையத்தளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

அதுமட்டுமில்லாமல் ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரத்தில் சேதுபதி நடித்து வருவதாகவும் வில்லன் போல் இருந்தாலும் இறுதியில் உண்மையான ஹீரோ அவர் தான் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது இணையதளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல் தற்போது வரை படத்தின் உண்மையான வில்லன் யார் என்ற தகவல் வெளியாகவில்லை. இதைப் பற்றிய உங்களுடைய கருத்துக்களை பதிவு செய்யவும்.