Mon. Feb 24th, 2020

Raja News

Tamil News Website

சுவாச கோளாறுகாரணமாக மயங்கி விழுந்த மாணவி – கொரோனா என பயந்து தலை தெறிக்க ஓடிய ஆசிரியர்கள்

கண்டியில் சுவாச கோளாறுக்கு உள்ளான மாணவி ஒருவரை வைத்தியசாலையில் சேர்ப்பிப்பதற்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எவரும் முன்வராத சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கண்டியில் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 13 வயதுடைய மாணவி பாடசாலையில் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது திடீரென சுகயீனமடைந்து சுவாசிக்கவும் சிரமப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பாடசாலை நிர்வாகம் அவசர நோயாளர் காவு வண்டிக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

எனினும் நோயாளர் காவு வண்டி பாடசாலைக்குள் வருகை தந்தபோது அம் மாணவியை வைத்தியசாலைக்கு அழைத்து செல்வது யார் என்பது குறித்து ஆசிரியர்கள் பின்வாங்கியுள்ளனர்.

உலகையே தற்போது கொரோன வைரஸ் அச்சுறுத்திவரும் நிலையில் இலங்கையிலும் இரண்டு சீன பெண்கள் கொரோனா தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே மாணவியின் அருகில் செல்ல அச்சமடைந்து அனைவரும் ஒதுங்யிருந்துள்ளனர்.

அத்துடன் மாணவியை நோயாளர் காவு வண்டிக்கு ஏற்றி அமரச்செய்ய கூட யாரும் முன்வரவில்லை.

இந்த சந்தர்ப்பத்தில் நோயாளர் காவு வாகனத்தின் சாரதி தானே முன் வந்து அம்மாணவியை வாகனத்திற்கு அழைத்துசென்ற பின்னரே ஆசிரியை ஒருவர் குறித்த வாகனத்தில் மாணவியுடன் சென்றுள்ளார்.

குறித்த மாணவியை பரிசோதித்த வைத்தியர்கள் மாணவிக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை எனவும், அவர் சுவாசக்கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் , குறித்த மாணவிக்கான சுவாச மட்டம் மிக குறைந்தளவிலேயே காணப்பட்டுள்ளதாகவும் மேலும் 10 நிமிடங்கள் தாமதித்திருந்தால் மாணவி உயிரிழந்திருப்பாள் எனவும் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை எந்த நோயும் நம்மை தீண்டாமல் நம்மை பாதுகாத்துக்கொள்வது அவசியம் தான்.ஆனால் கண்முன்னே ஒருவர் திடீரென நோயுற்றால் இவ்வாறு செய்வது மனிதாபிமானமற்ற செயல் என பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.